A great WordPress.com site

வணக்கம் நண்பர்களே. இன்னொரு வாரம். இன்னொரு புதிர். இன்னொரு பாடல்.

இதுவரையில் எளிமையான பாடல்களைக் குடுப்பதாக சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். சிலர் குறிப்புகள் மிகமிக எளிமையாக இருக்கின்றன என்றும் கூறியிருந்தார்கள். இன்னும் சில நண்பர்கள் குறிப்புகளை வைத்துக் கொண்டு பாடல்களைக் கண்டுபிடித்ததாகக் கூறியிருந்தார்கள்.

உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. உங்கள் கருத்தை மனமார மதிக்கிறேன்.

இந்தப் புதிரின் நோக்கம் உங்களை விடை தெரியாமல் தோல்வியடைய வைப்பதல்ல. எப்படியாவது பாடலைக் கண்டுபிடித்து ரசிக்க வைப்பதே புதிரின் நோக்கம். ஆகையால்தான் பாடலைக் கண்டுபிடித்த பிறகு அதை முழுமையாக ஒருமுறை கேளுங்கள் என்று சொல்கிறேன்.

சரிதானே?

இன்றைய பாடல் எளிமையான பாடல்தான். வெற்றிப் படத்தின் பாடல் தான்.

முதலில் பாடகர் வரிசையாகத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று இருந்தேன். இசைத் துணுக்குகளையும் அதற்கேற்றார் போல் நறுக்கி பெயரிட்டும் வைத்தேன்.

திடீரென்று ஒரு யோசனை. அந்த வரிசையை சற்று மாற்றினால்தான் என்ன என்று! ஆகையால் நீங்கள் இன்று எதிர்பார்த்த பாடகரோ பாடகியோ இன்று வரமாட்டார்.

இந்தப் பாடலின் பாடகியை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் பாடலை மிகமிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

இந்தப் பாடல் காதற் பாடல். ஆனால் காதற் பாடல் அல்ல. என்ன குழப்பமாக இருக்கிறதா? ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் காதல் எப்படி உருவாகிறது என்பதை அணுவணுவாக விளக்கும் பாடல்.

மெல்லிசை மன்னரின் இசைப்புதிரைத் தொடங்கிய பிறகுதான்… அவர் இசையில் எத்தனை “சிச்சுவேஷன்” பாடல்கள் உள்ளன என்பதே கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. சம்பிரதாயமாக ஒரு காதற் பாடல், நாயகன் பாடல் என்பதையெல்லாம் தாண்டி சிச்சுவேஷன்களுக்கு அதிகமாக பாடல் அமைத்தது மெல்லிசை மன்னராகத்தான் இருக்கும் என்பது என் கருத்து.

சரி. இசைத் துணுக்கைக் கேளுங்கள். பாடலைக் கண்டுபிடியுங்கள்.

There have been different opinions about the complexity of the songs and the clues. I respect all your opinions.

Once again I would like to reiterate the purpose of the quiz. The purpose is to introduce the immortal songs of MSV to you all. Once you identify the song, please listen to the brilliant and delightful compositions of MSV.

I started the quiz with singers series. In fact I have already prepared the clips for eight more quizzes. With a sudden thought I changed the plan after 4th quiz and bringing in different song.

It is an easy song from successful movie. If you identify the singer, then it is just a idly walk (how long to use the phrase cake walk).

The song explains how the love blossoms between a guy and girl and the way it progresses.

Listen to the music clip and identify the song.

Lifeline clue => “Mukta Srinivasan directed movie has current chief minister as a leading protogonist.
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல் – தெரியாதோ நோக்கு தெரியாதோ (Theriyadho Nokku)
பாடியவர் – மனோரமா (Manorama)
வரிகள் – கவியரசர் கண்ணதாசன் (Kannadasan)
படம் – சூரியகாந்தி (Sooriyakanthi)
இயக்கம் – முக்தா சீனிவாசன் (Mukta Srinivasan)

அன்புடன்,
ஜிரா

Comments on: "MSV Quiz – 005 – காதல் பிறக்கும் கதை" (23)

  1. தெரியாதோ நோக்கு??

    அப்படின்னு தான் தோணுது.. ஆனா உங்க utubeல நீங்க போட்டிருக்கிறது கன்பீசன்.

    பொறுமையா கன்பர்ம் பண்றேன்

  2. /இந்தப் புதிரின் நோக்கம் உங்களை விடை தெரியாமல் தோல்வியடைய வைப்பதல்ல/ ஒரு வாரமா சுத்தல் தான் அதுக்காக இப்படி குத்தனுமா 🙂

  3. தெரியாதோ நோக்கு தெரியாதோ-சூரியகாந்தி-மனோரமா

  4. சூர்யகாந்தி – தெரியாதோ நோக்கு

  5. Theriyatho nokku theriyatho frm suriyagandhi..

  6. ராஜா said:

    சூர்யகாந்தி படத்திலிருந்து தெரியாதா நோக்கு பாடல்.

    இந்தப் பாட்டை இன்னைக்குதான் முத தடவையா கேக்குறேன். லைஃப்லைன் க்ளு வச்சு கூகுள்ல தேடுனா இந்தப் படம்தான் முதல்ல வந்தது :).

    இந்தப் படத்துல இருந்து ‘பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது’ பாட்டை மட்டும்தான் அடிக்கடி கேட்டுருக்கேன், பிடித்த பாடலும் கூட.

    @rajabalanm

  7. மனோரமா – தெரியாதோ நோக்கு தெரியாதோ
    சூர்ய காந்தி இந்த படத்தின் எல்லா பாடல்களும் அருமை , -SPB – யின் இளமை ததும்பும் குரலில் நான் என்றால் அது அவளும் நானும் is my favourite. 🙂

  8. ‘தெரியாதோ நோக்கு தெரியாதோ’ – சூரிய காந்தி

    for whatever choice you have opted for, I am like the way you are progressing the quiz. Thought you will give ‘paramsivan kazhuthil irunthu’

  9. பாடல்: தெரியாதோ நோக்கு
    படம்: சூர்யகாந்தி

    மனோரமா பாடியப் பாடல்… கண்ணதாசனின் காதல் விளக்கப் பாடல் வரிகள்…பாட்டு முழுக்க வரும நையாண்டி மேளம் ..இந்தப் படத்துல தான் கண்ணதாசனே காட்சி தரும் பரமசிவன் கழுத்திலிருந்து பாடல்… ஹிஸ்டீரிகள் பெண் வேடங்கள் இவங்களுக்கு இயல்பாவே வரும்…ஆனா அருமையான நடிகை.. இந்தப் படத்துக்கு ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்குனாங்கன்னு நினைக்கிறேன்… நன்றிங்க ஜிரா சார்..

  10. “தெரியாதோ நோக்கு தெரியாதோ..சின்னப் பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணும்னு தெரியாதோ..” ஆச்சியின் குரலில் “சூர்யகாந்தி” படப்பாடல்.

    ஆச்சியின் குரலில் வந்த அத்தனை பாடல்களும் அமிர்தம் தான்…கேட்டுக் கொண்டேயிருக்கலாம், அதிலும் இந்தப் பாடல்…ஆஹா..ஆஹா…!!

    இந்த படத்தில் TMS ஐயா பாடிய ”பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்யமா?..” பாடல் என் தாத்தாவிற்கு மிகவும் பிடிக்கும்…விரும்பி கேட்பார்….இசைக்கும் அர்த்தமான வரிகளுக்காகவும்…

  11. ” theriyatho nokku” by the great artist the one and only Manorama. She is a very good role model for women in TN. Apart from that, this is a beautiful song…..just listen the interludes ( I listen more then 20 times) is very amazing !!!

  12. தெரியாதோ நோக்கு- மனோரமா- சூரியகாந்தி

  13. @seevin Suryagandhi Theeryaodhu nooku :-)))

  14. பாடல் “தெரியாதோ நோக்கு தெரியாதோ, சின்னப் பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ”. படம் சூரியகாந்தி.

    மனோரமா பாடிய அருமையான பாடல். முதல் முறை கேட்கிறேன் !

  15. Venkatesh A R said:

    Manorama, Theriyadho nokku theriyaadho, Suryakanthi.

  16. தெரியாதோ நோக்கு தெரியாதோ…

    படம் : சூரியகாந்தி
    பாடகர் : மனோரமா

    வாழ்க லைஃப்லைன்…!! 🙂

  17. theriyadho nokku by manorama

  18. Just seeing your tweet, just before I go down to sleep. So, just came here to quickly check, GiRa. This is the versatile Manorama Aachi’s “Theriyaadho Nokku” from “Suryagandhi”.

    It was a Jayalalithaa and Muthuraaman starrer. Correct?

    I am not sure, if I see the shades of Maestro Ilaiyaraaja’s “Kettelzhe ange adhai paathelzha inge” by P. Susheela, in this song from MSV. Other than the brahminical overtones, these two songs have that mischievous, rustic humor imbued in them.

    Please let me know if the answer is wrong. I will take a stab during the day. Otherwise, I am sure, this sounds like that song. Thanks.

  19. theriyathO nOkku theriyathO – Suryakanthi by Manorama.

    Listening after a long time. She has a nice and deep voice. I remember now my aunt used to sing this song often those days. Very nice song. Thanks a lot. 😀

  20. TheriyAdhO nOkku, Suryagandhi. Paramasivan Kazhuthil Irundhu is the song of the film, performed, written by Kannadasan. Lovely one that is, with its meaning. However, Naan Endraal Adhu AvaLum Naanum is another favorite of mine. The couple in an ego war, win the best pair award and break into a song on stage. Muthuraman has the sax going with him in the interlude and JJ has a solo violin and finally as the song ends and they dance together, the sax and the violins come together. MSV’oda one of the few orchestrations I genuinely like.

  21. பாடல் – தெரியாதோ நோக்கு தெரியாதோ சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ…
    பாடியவர் – மனோரமா
    படம் – சூரியகாந்தி

    எம்.எஸ்.வி அவர்களின் இந்த க்விஸ் வாரம் ஒரு முறை வருவதால் நினைவில் சட்டென்றூ வருவ்தில்லை. மன்னிக்கவும்.

  22. I have always wondered abt the instruments in this song, giving that “ting ting” effect; Is it Xylophone or ஜலதரங்கம்?

    One of Kannadasan’s “different” song:
    அவாள் அவாள் ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கு…
    சுவாமி மூர்த்தியைப் பார்த்தாளா? பையன் மூஞ்சியைப் பார்த்தாளா?:))))

    To love = is one happy thing
    To watch others loving = is much more happy:))
    (of course without affecting their privacy)
    This song is like that.. Not a lovers song, But a love song – about others love!

    Sometimes, I feel shy, on seeing couples intimately engaged in New York streets:)
    Though I bow my head down so that not to affect their privacy, still, ஒரக் கண்ணால் பாக்கும் போது அவங்களுக்கு வராத வெட்கம், எனக்கு வரும்:)
    Even after coming home, it will replay in the mind, how they are completely unaware of surroundings & immersed in love, eyes into eyes!
    ———-

    Song: தெரியாதோ நோக்கு தெரியாதோ?
    Singer: Manorama
    Movie: Suryagandhi

Please provide your answer and comments..