A great WordPress.com site

வேனலில் ஒரு மழ – கோடையில் ஒரு மழை. இந்த மலையாளத் திரைப்படம் ஒரு பெருவெற்றி பெற்ற தமிழ்ப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

இயக்குனர் மகேந்திரனுக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்த முள்ளும் மலரும் திரைப்படம் கேரளாவுக்குப் போகும் போது “வேனலில் ஒரு மழ” என்றாகி விட்டது.

தமிழில் இந்தப் படத்துக்கு இளையராஜா அட்டகாசமாக இசையமைத்திருந்தார். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வரியும் அப்படியே எனக்கு மனப்பாடம். ஆனால் மலையாளத்தில் மெல்லிசை மன்னரின் இசை.

என்ன சடன் பிரேக் போடுகிறீர்கள்? கொஞ்சம் சங்கடமான சூழ்நிலை என்றா? ராஜாவைப் போல இசையமைக்க எம்.எஸ்.வி எதுக்கு? எம்.எஸ்.வியைப் போல இசையமைக்க ராஜா எதுக்கு? இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொண்டாலும் அவர்கள் தனித்துவமானவர்கள்.

மலையாளத்தில் எம்.எஸ்.வி பாணியில் எல்லாம் அருமையான பாடல்கள். சட்டென்று நினைவுக்கு வருவது வாணி ஜெயராம் பாடிய “ஏது பந்தல் கண்டாலும் அது கல்யாணப் பந்தல்” பாட்டு.

ஆனால் படத்திலேயே அதிமுக்கியமான பாடலை விட முடியுமா? தமிழில் நித்தம் நித்தம் நெல்லிச் சோறாக வந்த சாப்பாட்டுப் பாட்டைத்தான் சொல்கிறேன்.

மலையாளத்தில் ஸ்ரீகுமரன் தம்பி எழுதி அயலா பொறிச்சதுண்டு கறிமீன் வறுத்ததுண்டு என்று மிகமிகப் பிரபலமானது. அதுவும் எல்.ஆர்.ஈசுவரியின் குரலில்.

அயலா பொறிச்சதுண்டு
கறிமீன் வறுத்ததுண்டு
கொடம்புளி இட்டு வச்ச
நல்ல செம்மீன் கறியுண்டு
தும்பப்பூ நிறமுள்ள செறுமணி சோறுண்டு
உப்பிலிட்ட மாங்காயுண்டு
உண்ணான் வா மச்சுனரே

ரஜினியையும் படாபட் ஜெயலட்சுமியையும் பார்த்துவிட்டு மதுவையும் ஸ்ரீவித்யாவையும் பார்ப்பது கண்களுக்குச் சோதனையாக இருந்தாலும் அற்புதமான பாடல் இது. ஒருமுறையாவது கேளுங்கள். கருத்தைச் சொல்லுங்கள்.

அன்புடன்,
ஜிரா

Comments on: "MSV Non Tamil Song Intro 004 – அயலா பொறிச்சதுண்டு" (6)

  1. Nice one! Quite a find again for me. Also very interesting for me to note that Mullum Malarum was remade in Malayalam (was dubbed in Telugu as Mullu Puvvu, but a full fledged remake, no). This at a time when Kannada, Telugu and Tamil borrowed liberally from each other (case in point: HaayaagidE Ee DinA, ThEn sindhudhE vAnam, mrOgindi veeNA from Thaayi DEvaru, Ponnukku Thanga Manasu and Zamindar Gaaru Ammayi) but not Malayalam which had a creative explosion from the 70s sustaining on to the 90s. Even recently, Adoor Gopalakrishnan, art film director and internationally lauded for the dozen odd films he’s made in over 3 decades, spoke highly of Mullum Malarum along with Sivaji Ganesan. Dindigul’la (enga ooru 🙂 ) avar padichadhAgavum, Sivaji’ya rasichadhAgavum solliruppAr. adhula MM pathiyin nomba uyarvA pEsiruppAr. So it is evident that Mallus across the spectrum had respect for MM.

    This is a fine song. Evokes Kadhalikka NEramillai KadhalippAr YArumillai, especially at “aviyalil padavayanga, mokkAka murungekkA” and “chandhiranai kaNdu vandhEn, sarasam nadatha vandhEn”. Quite beautifully fits into Mallu and Tamil folk 🙂

  2. அடடா…நம்ம வீட்லயும் மீன் கொழம்பு தாங்க… சரியான situation song கொடுத்திருக்கீங்க…

    பாட்டு கேட்டு முடிக்கிறதுக்குள்ளயே எல்லா மீனையும் கலந்து கட்டி வயித்த நெறச்ச ஒரு ஃபீலிங்கு…

    இந்தப் பாடல்ல “கொடம்புளி”-னு ஒரு வார்த்தை வருதே…அது நம்மாளுங்களுக்கு தெரியுமான்றது தெரியாது…நம்ம ஊர் புளி மாதிரி இருக்காது…சொல்லப்போனா மலநெல்லி மாதிரி இருக்கும் ஆனா நல்லாவே சதைப் பற்றோட….காய வைச்சு விப்பாங்க..எங்க கோவை பகுதில எல்லாம் கூட இருக்கு…நல்ல புளிப்பும் கொஞ்சம் துவர்ப்பும் இருக்கும்…தண்ணீர் விட்டு கரைக்க வேண்டியதில்ல
    (சிலர் வெந்நீர் விட்டு கரைப்பாங்க)..அப்படியே ஒரு எழுமிச்சை அளவுக்கு எடுத்து மீன் கூட்டி வைக்கும்போது போட்டாப் போதும்…ஒரு மூனு நாலு நாள் மீன் கொழம்பு கெட்டுப் போகாம இருக்கும்..அதுவும் மண் சட்டில செய்வாங்க..உரில கட்டி தொங்க விட்டு, ஒவ்வொரு நாளும் சுடு சோறு வைச்சி அளவில்லாம வயித்த நிறப்பலாம்…ஆனா மனசு நிறையாது பாருங்க..இன்னும் கொஞ்சம் கேட்கும்… நம்ம எம்.எஸ்.வி பாட்டு மாதிரி…

  3. I didnt know this was MSV. Ofcourse a superhit and a well remembered song thanks to its situational usefulness.

    Madhu, ofcourse, was a dampener. Atleast, Srividya is something to look at.

    As I recalled elsewhere, the famous “ketta paya saar indha kALi” when Rajini gets dismissed from the scene goes as follows:

    Jayan, playing the engineer: kALi, bad news. I argued so much for you but the superiors refused to keep you in the job since you lost your hand

    Madhu, playing kALi: with kaLimaN expression, “sari gnAn pOi oru chAyA kudichittu varAm”

    Maybe they should have had Jayan playing Rajini and Madhu, the engineer.

  4. Munk, Your spiderreading of the whole internet is incomplete. On several occasions and sevarl forums, I have recorded that Mullum Malarum was remade in Telugu with Mohanbabu Revathy as Lakshim Kalyanam.

    I would have expected you to have quoted it by now going by your photographci memory of everything ever recorded on internet releated to Tamizh cinema

  5. Sorry I missed a beat. It is Seethamma pelli, not Lakshmi kalyanam

  6. //Munk, Your spiderreading of the whole internet is incomplete. On several occasions and sevarl forums, I have recorded that Mullum Malarum was remade in Telugu with Mohanbabu Revathy as Lakshim Kalyanam.
    I would have expected you to have quoted it by now going by your photographci memory of everything ever recorded on internet releated to Tamizh cinema//

    adhula unguLukku’laam naan junior dhaan 🙂 I thought Mullum Malarum was only dubbed. Thanks. Today I Learnt.

Please provide your answer and comments..