A great WordPress.com site

வணக்கம் நண்பர்களே.

சீசன் ஒன்றின் போனஸ் புதிருக்கு உங்களை வரவேற்கிறேன். இந்தப் பாடலை எப்போது கொடுப்போம் என்று நான் ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருந்தேன். கடைசியில் சீசன் ஒன்றின் போனஸ் குவிசாக கொடுக்க முடிந்திருக்கிறது.

இன்றைய நாயகி எல்.ஆர்.ஈசுவரிதான். அவர் நடத்தப் போவது தனிக் கச்சேரி. அதிலும் மலையாளத்தில் தொடங்கி தெலுங்கு வழியாக கன்னடத்துக்குள் நுழையும் போது கல்யாண விருந்து சாப்பிட்ட திருப்தி வந்துவிடும்.

இந்தப் படத்துக்கு இசையமைக்கும் போது அளவுக்கு மீறித் தலையிட்டு மெல்லிசை மன்னரை எரிச்சல்படுத்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அடுத்த படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று மெல்லிசை மன்னரே ஆவேசப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் அதீத தலையீடோ… இசையமைப்பதில் சுதந்திரமின்மையோ.. இந்தப் படத்தின் பாடல்கள் மிகச் சுமார். எம்.ஜி.ஆர் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்தும் படமும் ஓடவில்லை.

இந்தப் பாடல் யூடியூபில் இருக்கிறது. தேடிப்பாருங்கள். காதுக்கும் வயிற்றுக்கும் சேர்ந்தே விருந்து கிடைக்கும்.

Welcome to Season-1 Bonus Quiz. I have been waiting to give this song for more than a year and finally given in bonus quiz.

L.R.Eswari is heroine in today’s quiz. It is a wonderful treat in four languages. It is feast in Malayalam, Telugu and Kannada. Hindi portion was removed in movie.

MGR interrupted with his own ideas when MSV was composing for this movie. The interruption was to the level of irritation and MSV even said he didn’t want to work in MGR’s next movie. Probably due to the irritating interruption, the songs of this movies didn’t become super-hit unlike other MGR-MSV movies. Even though MGR acted in two contrast characters, the movie bombed at box-office.

This song is available in YouTube. Search and enjoy. It will be a feat for ears and stomach.

Lifeline Clue ==> “This movie was remake of famous M.K.Radha and Bhanumathi starer Apporva Sahodarargal
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல்: விருந்தோ நல்ல விருந்து
பாடியவர்: எல். ஆர். ஈசுவரி
படம்: நீரும் நெருப்பும்
இயக்கம்: ப. நீலகண்டன்

Song: Virundho Nalla Virundhu
Singer: L. R. Eswari
Movie: Neerum Neruppum
Direction: P. Neelakandan

அன்புடன்,
MSV Quiz

வணக்கம் நண்பர்களே.

இன்று மெல்லிசை மன்னர் இசைப்புதிரின் சீசன் ஒன்றின் கடைசிப் புதிர். இத்தோடு மெல்லிசை மன்னரின் இசைப்புதிர் முடியவில்லை. மெல்லிசை மன்னரின் இசைச் சரக்கும் முடியவில்லை. சிறிய இடைவேளைக்குப் பிறகு மெருகேறிக் கொண்டு புதுமைகளுடன் மீண்டும் வரும். இந்த இடைவேளை மேலும் செழுமையாக்கிக் கொள்ளத்தான். சில புதுமைகள் மனதில் உள்ளன. அவற்றைச் சுவையாகச் செயல்படுத்துவது எப்படியென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் இரண்டாவது சீசன் தொடங்குமென்று உங்களோடு நானும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னென்ன செய்யலாம் என்று உங்கள் கருத்துகளை என்னுடைய மின்னஞ்சலுக்கு (gragavan at gmail) அனுப்பவும். அது எனக்கு உதவியாக இருக்கும்.

முதல் சீசனின் இறுதிப் புதிரில் எந்த நடிகருடைய படத்தைக் கொடுக்கலாம் என்று எளிதாக முடிவு செய்துவிட்டேன். ஆனால் எந்தப் படத்தைக் கொடுக்கலாம் என்று யோசிக்கத்தான் நேரமானது. நிறைய யோசனை செய்து இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

சாப்பாட்டு இராமனாக தண்டச்சோறு சாப்பிடும் ஒருவன். உடல் முதிர்ந்த அளவுக்கு அறிவு முதிரவில்லை. அவனுக்கும் வருகிறது காதல். அதுவும் பணக்காரப் பெண் மேல். அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் புல்லாங்குழல். அதை வாசிக்கிறான். மோகனத்தையும் கல்யாணியையும் சுருதி சுத்தமாகவா வாசித்திருப்பான்? இல்லை. அவனுக்குத் தெரிந்த எளிய இசையில் காதலைச் சொன்னான். அதுதான் முதலிசை.

அந்த ஊரிலிருந்து விரட்டப்பட்டு சென்னைக்குப் போகிறான். அங்கு தற்செயலாக ஒரு இயக்குனரைச் சந்திக்கிறார். அவரிடம் நடித்துக் காட்டும் போது புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும் என்று வாசிக்கிறான். இந்த வாசிப்பில் காதல் இல்லை. ஒரு துள்ளல் இசையாக வந்து விழுகிறது. அதுதான் இரண்டாம் இசைத்துணுக்கு.

படத்தைக் கண்டுபிடித்து விட்டீர்களா?

Dear friends.

We are concluding the season one of MSV Quiz today.

It was a tough task to finalise the movie for this quiz.

Innocent like child. Grown up like adults. Best statements to define him. He eats well and do nothing. In an unbelievable situation he falls in love with a rich girl. Flute helps him to express his love. It is not symphony, but a simple tune to express the love.

He was driven away from the village. Accidentally he meets a director in Chennai AVM studio and exhibits his acting skills. He plays the same flute again, but in a tune full of joy.

Hope you all got the movie name!

Lifeline Clue ==> “K.R.Vijaya acted as a heroine of this movie titled with a popular devotional movie song
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

படம்: ராமன் எத்தனை ராமனடி
இயக்கம்: பி. மாதவன்

Movie: Raman Ethanai Ramanadi
Direction: P. Madhavan

அன்புடன்,
MSV Quiz

வணக்கம் நண்பர்களே.

காதல் அழிவதில்லை. மெல்லிசை மன்னரின் இசையும் அழிவதில்லை. இன்றைய பின்னணி இசையைக் கேளுங்கள். புரியும்.

நண்பனின் ஊருக்குச் சென்றவனுக்கு இரவில் ஒரு பெண் குரல் கேட்கிறது. தொடர்ந்து ஒரு சலங்கைச் சத்தம். அது அவனை அங்கிருக்கும் மாளிகைக்குள் இட்டுச் செல்கிறது. அவனுக்குள் ஏதேதோ குழப்பான எண்ணங்கள். சிந்தனைச் சிதறல்கள். அந்தக் குழப்பத்தில் ஏதேதோ நினைவு வரும் போது அந்தச் சலங்கைச் சத்தம் ஓடிவிடுகிறது.

இதுதான் காட்சி. கண்ணை மூடிக் கொண்டு இசையைக் கேளுங்கள். மேலே நான் சொன்னதையெல்லாம் இசையால் கேட்பீர்கள்.

மிக மிக எளிதாக இந்தப் படத்தைக் கண்டுபிடித்து விடுவீர்கள் என்று தெரியும். 🙂

Love never dies. And so the music of MSV. Listen to today’s BGM to agree.

Hero goes to friend’s village and hears a lonely humming of a woman. Sounds of her ankles follow the humming. That leads him to an abandoned bungalow. The bungalow churns his memory pool. Waves of confusions hit his thoughts. And the sound of anklets run away.

This is the scene. Close your eyes and you will imagine the scene through music.

I am sure it is a cakewalk for you all to identify the movie.

Lifeline Clue ==> “Devika acted as heroine in the movie directed by Sridhar
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

Answer will be published on coming Wednesday 7.30PM IST

படம் – நெஞ்சம் மறப்பதில்லை
இயக்கம் – ஶ்ரீதர்
Movie – Nenjam Marapathillai
Direction – Sridhar

அன்புடன்,
MSV Quiz

வணக்கம் நண்பர்களே.

பின்னணி இசை என்பது தீம் இசையாக மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில நொடிகள் வரும் அழுத்தமான காட்சிக்காகவும் இருக்கலாம். இதோ இன்றைய புதிரைப் போல.

அவன் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறான். அந்நேரம் பார்த்து தாய்க்கு நெஞ்சுவலி. அடிக்கடி வந்ததுதான். அவனுக்குத் தெரியாமல் மருந்து எடுத்துக் கொள்கிறாள். இன்று அவன் ஊருக்குப் புறப்படும் போது வந்துவிட்டது.

அந்த இசையைக் கவனியுங்கள். நெஞ்சுவலிக்கான இசை என்று முத்திரை குத்திக் கொண்டு வந்திருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் மானிட்டரில் ஈசிஜி ஓடுவது தெரியும்.

படம் தெரிந்ததா?

Background music need not be a theme music always. It could be needed for a quick important scenes of few seconds long, like today’s quiz.

He is getting ready for a travel. Unfortunately his mother suffers from chest pain. She tries to hide from him. When you listen to the music clip, you can very easily find the when the mother suffers from chest pain.

If you close the eyes and listen, you can see ECG waves in your mind.

Got the movie?

Lifeline Clue ==> “Mukta Srinivasan directed this movie and half of the movie was shot in a popular tourist place.
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

படம்: சிம்லா ஸ்பெஷல்

இயக்கம்: முக்தா சீனிவாசன்

Movie: Simla Special

Direction: Mukta Srinivasan

அன்புடன்,
MSV Quiz

வணக்கம் நண்பர்களே! இந்த மாதத்தில் மெல்லிசை மன்னரின் இசைப்புதிர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த இரண்டாண்டுப் பயணத்தைச் சிறப்பிக்கும் வகையில் பின்னணி இசை(BGM), முகப்பிசை(Title Music) ஆகியவைக் கொண்டு புதிர்களை அமைக்க ஒரு எண்ணம். எல்லாம் உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த படங்கள்தான். 🙂 தீம் இசையெல்லாம் எம்.எஸ்.வி அப்பவே செஞ்சாச்சு. இன்றைய புதிர்ல பாருங்க. தீம் இசை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இசைக்கருவி வழியாக ஒவ்வொரு மனநிலையைக் கொண்டு வருவதை. இந்தப் படத்தின் பின்னணி இசை சிறந்த ஒலித்தரத்தில் கிடைக்கவில்லை. பொறுத்துக்கொள்ளவும். தப்பு செய்து மாட்டிக் கொண்டவன் தப்பித்து ஓடுகிறான். அவனைச் சுடுவதற்காக காரில் துரத்துகிறார் ஏமாந்தவர். அதுதான் இசைத்துணுக்கின் முதற்பகுதி. தவறுதலாக விபத்து நடந்து விட்டதற்காக வருத்தப் படுகிறார் அந்த ஏமாந்தவர். அதற்கும் அதே இசைதான். ஆனால் சோகமாக. கடைசியில் உண்மையெல்லாம் தெரிந்து சுபம். அப்போதும் அதே இசைதான். ஆனால் மங்கல வாத்தியங்களோடு. மூன்று பகுதிகளிலும் இசைக்கோர்ப்பையும் இசைக்கருவிகளின் வேறுபாட்டையும் உற்றுக் கவனியுங்கள். நாங்கள்ளாம் அப்பயே….. படம் தெரிஞ்சிருச்சா? 😉 Welcome Friends. We are nearing second anniversary of MSV Quiz. We are yet to see core songs. To celebrate this second anniversary, I have planned BGM/Title Music Quiz from the famous movies. Theme music was very much there during MSV’s period. MSV used it extensively. I could appreciate them while watching the classical movies. Culprit was chased by the cheated person. the first portion of the BGM is for that. Please forgive for the low quality audio. I couldn’t manage HQ audio for this movie. The chaser feels guilty for the accident he made. The second portion of the BGM is for that. It is the same music, but brings out the guilt of the chaser. Everybody knows everything and everything is cleared. Happy Ending. That is the same music again, but with all happy notes. Listen the differences between the three portions. And you know what MSV did. 😉 Got the movie name? https://soundcloud.com/msv-quiz/quiz-102/s-F0HN8 Lifeline Clue ==> “Madhavi played the heroine character in this movie directed by veteran director.” To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse. While answering, please include your twitter id or blog id along with the answer.

படம்: தில்லுமுல்லு

இயக்கம்: கே. பாலச்சந்தர்

Movie: Thillu Mullu

Direction: K. Balachandar

அன்புடன்,

MSV Quiz

வணக்கம் நண்பர்களே!

திருமணத்தை “இரு” மணம் செய்யும் மக்களும் நாட்டில் உண்டு. அப்படி இரு மணம் செய்து கொண்ட கணவனின் இரு மனைவியர் ஒருவரையொருவர் அறியாமல் தோழிகளாகிறார்கள். அந்தத் தோழிகள் இணைந்து சுமங்கலி பூஜையில் பாடும் பாடல்தான் இன்று.

வழக்கமாக பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈசுவரியும் மெல்லிசை மன்னர் இசையில் பாடிய ஜோடிப் பாடல்கள் பிரபலம். இந்தப் பாடலில் ஒரு மாறுதலாக எஸ்.ஜானகியும் ஜிக்கியும் பாடியிருக்கிறார்கள்.

கண்டுபிடித்து விட்டீர்களா?

There are men who has two families. And so the hero of this movie. Somehow both his wives became friends. They sing this song on the auspicious day.

Usually P.Suseela and L.R.Eswari used to sing such duets. MSV made this duet rare by making Jikki and S.Janaki sing the song.

Got the song?

Lifeline Clue ==> “Sivaji, Padmini and Sarojadevi acted in this movie.
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
பாடியவர் – ஜிக்கி, எஸ்.ஜானகி
வரிகள் – கண்ணதாசன்
படம் – தேனும் பாலும்
இயக்கம் – பி.மாதவன்

Song – Manjalum Thandhaal Malargal Thandhaal
Singer – Jikki, S.Janaki
Lyrics – Kannadasan
Movie – Thenum Paalum
Direction – P.Madhavan

அன்புடன்,
MSV Quiz

வணக்கம் நண்பர்களே! மெல்லிசை மன்னர் இசைப் புதிர்ப் பயணத்தில் இன்று நூறாவது புதிர். தொன்னூற்றொன்பது புதிர்களுக்கு நம்மோடு இருந்த மெல்லிசை மன்னர், நூறாவது புதிரைக் கொண்டாட நம்மோடு இல்லை. ஆனால் அவர் நம்மை விட்டு விலகுவதும் இல்லை. நம்மை விட்டுப் போவதுமில்லை. இசையாய் நம்மோடு என்றும் இருக்கப் போகிறார். மெல்லிசை மன்னரே, தெய்வத்துக்கும் இசை கேட்க ஆசை வந்து, மனிதர்களுக்கு இசையமைத்தது போதும் என்று உங்களை அழைத்துக் கொண்டதோ! நூறாவது புதிர் மங்கலாமான புதிராக இருக்கட்டும் என்று திருமணப் பாடலை தேர்வு செய்து வைத்திருந்தேன். ஒரு பெண்ணின் திருமணம் நடக்கும் போது இடம் பெறும் மிக இனிய பாடலிது. எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள். இந்தப் பாடலில் தேவி என்ற சொல்லை எத்தனை சங்கதிகளோடு இசையரசி பி.சுசீலா பாடுகிறார் என்பதை எடுத்துக் காட்ட அந்தப் பகுதியையும் புதிரில் இணைத்துள்ளேன். அதே வரியை இரண்டாம் முறை பாடும் போது சங்கதிகளை வேறுவிதமாக மாற்றியமைத்த மெல்லிசை மன்னரை எவ்வளவுதான் பாராட்டுவது!!! பாடலில் வரும் நாயனமும் மேளமும் நம்மை அப்படியே திருமண வீட்டுக்கே கொண்டு சென்றுவிடும். Welcome to the 100th MSV Quiz. We have an auspicious marriage song for 100th quiz. It will be a cakewalk for you all. I have included a voice clip of P.Suseela in which she sings the name Devi with so much of nuances. The orchestration of the song magically takes us to the marriage hall. https://soundcloud.com/msv-quiz/msvquiz-100/s-2sVaI Lifeline Clue ==> “Sivaji Ganesan, Muthuraman and Nagesh played main roles of the movie. None of them have pair in this movie” To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse. While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல் – வசந்தத்தில் ஓர் நாள்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
படம் – மூன்று தெய்வங்கள்
இயக்கம் – தாதாமிராசி

Song – Vasanthathil Or Naal
Singer – P.Suseela
Lyrics – Kannadasan
Movie – Moondru Deivangal
Direction – Dadamirasi

அன்புடன்,

MSV Quiz

வணக்கம் நண்பர்களே. பெண் பார்க்கும் நிகழ்ச்சியை வைத்தே நிறைய சினிமாப் பாடல்கள் வந்துவிட்டன. அப்படியொரு பெண் பார்க்கும் பாடல்தான் இன்றைய பாடல். அவள் திக்குவாய்க்காரி. பாடும் போது திக்கி விடுகிறது. அக்கா விட்ட இடத்திலிருந்து தங்கை விட்டதைத் தொடர்கிறாள். இந்தப் பாட்டை எஸ்.ஜானகியும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய இந்தப் பாடலும் இனிய பாடலே. கண்டுபிடித்து விட்டீர்களா? Groom has come to see the bride at her house. She sings a song for the occasion. But stammers in between. Her younger sister continues from where she stammered. S.Janaki and P.Suseela made this song memorable. Hope you found the song. https://soundcloud.com/msv-quiz/msvquiz-099/s-dfP78 Lifeline Clue ==> “Sivakumar acted as hero in this movie. Kamal did a villain role.” To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse. While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல் – பல்லவி என்று மன்னன் கேட்க
பாடியவர் – எஸ்.ஜானகி, பி.சுசீலா
வரிகள் – வாலி
படம் – சொல்லத்தான் நினைக்கிறேன்
இயக்கம் – கே.பாலச்சந்தர்

Song – Pallavi Endru Mannan Ketka
Singer – S.Janaki, P.Suseela
Lyrics – Valee
Movie – Sollathaan Ninaikiren
Direction – K.Balachandar

அன்புடன்,

MSV Quiz

வணக்கம் நண்பர்களே. ஜூலை மாதத்தில் என்ன தீம் வைக்கலாம் என்று யோசித்த போது “ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு” பாடல் நினைவுக்கு வந்தது. ஆகவே ஜோடி சேர்க்கும் திருமணப் பாடல்களாகவே வைத்துவிட்டேன். ஒரு வயதில் எல்லாரும் கல்யாணத்தைக் கிண்டல் செய்வது நடக்கும். அப்படி ஒரு நாயகி திருமணத்தைக் கிண்டல் செய்யும் பாடலைத்தான் இன்று பார்க்கப் போகிறோம். கல்யாணத்தைக் கிண்டல் செய்து பாடி நடித்ததாலோ என்னவோ, அந்த நடிகை இன்னும் திருமணமாகாமல் செல்வியாகவே இருக்கிறார். பாடலைப் பி.சுசீலா பாடும் அழகே அழகு. குரலில் தெரியும் கேலியையும் கிண்டலையும் கவனியுங்கள். அதற்காகவே அவர் பாடும் பகுதியையும் இணைத்துள்ளேன். பாடல் தெரிந்துவிட்டதுதானே? We have marriage songs this July month. It is a fashion to make fun of marriage at young age. And we have such a song for today’s quiz. A very famous heroine sings this song which makes fun of marriage. And the heroine is still unmarried. I have added the voice clip of P.Suseela to highlight and appreciate the satire tone. Hope you found the song. https://soundcloud.com/msv-quiz/msvquiz-098/s-bQinb Lifeline Clue ==> “This MGR starter movie name has part of MGR’s name” To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse. While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல் – கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
பாடியவர் – பி.சுசீலா
வரிகள் – வாலி
படம் – சந்திரோதயம்
இயக்கம் – கே.சங்கர்

Song – Ketti Melam Kottura Kalyanam
Singer – P.Suseela
Lyrics – Valee
Movie – Chandrodhayam
Direction – K.Sankar

அன்புடன்,

MSV Quiz

வணக்கம் நண்பர்களே.

ஜூன் 24ம் தேதி மெல்லிசை மன்னரின் பிறந்த நாள். அதே நாள்தான் கவியரசர் கண்ணதாசனுக்கும் பிறந்தநாள். அதனால்தானோ மெல்லிசை மன்னர்-கவியரசர் கூட்டணி இன்றும் உலகாள்கிறது. இருவரின் பிறந்தநாளையும் சிறப்பிக்கும் வகையில் கவியரசர் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்துப் பாடிய ஒரு பாடலைப் பார்க்கலாம்.

உறவுச் சிக்கல்களைச் சொல்லும் படங்கள் இன்றெல்லாம் குறைவு. ஆனால் அப்படிப் பட்ட படங்களையே வரிசையாகக் கொடுத்த இயக்குனர் ஒருவர் நடிகராக அறிமுகமான படம் இது. மிக எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்.

It is tough to make movies dealing with complex family relationship issues. A director who gave wonderful movies with such theme debuted as actor in this movie. It is very easy to identify the song.

Lifeline Clue ==> “This movie was directed by S.P.Muthuraman
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல்: குடும்பம் ஒரு கதம்பம்

படம்: குடும்பம் ஒரு கதம்பம்

பாடியவர்: எம். எஸ். விஸ்வநாதன்

வரிகள்: கவியரசர் கண்ணதாசன்

இயக்கம்: எஸ். பி. முத்துராமன்

Song: Kudumbam oru kadhambam

Movie: Kudumbam oru kadhambam

Singer: M. S. Viswanathan

Lyrics: Kaviyarasar Kannadasan

Direction: S. P. Muthuraman

அன்புடன்,
MSV Quiz