A great WordPress.com site

Archive for the ‘Manorama’ Category

MSV Quiz – 005 – காதல் பிறக்கும் கதை

வணக்கம் நண்பர்களே. இன்னொரு வாரம். இன்னொரு புதிர். இன்னொரு பாடல்.

இதுவரையில் எளிமையான பாடல்களைக் குடுப்பதாக சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். சிலர் குறிப்புகள் மிகமிக எளிமையாக இருக்கின்றன என்றும் கூறியிருந்தார்கள். இன்னும் சில நண்பர்கள் குறிப்புகளை வைத்துக் கொண்டு பாடல்களைக் கண்டுபிடித்ததாகக் கூறியிருந்தார்கள்.

உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. உங்கள் கருத்தை மனமார மதிக்கிறேன்.

இந்தப் புதிரின் நோக்கம் உங்களை விடை தெரியாமல் தோல்வியடைய வைப்பதல்ல. எப்படியாவது பாடலைக் கண்டுபிடித்து ரசிக்க வைப்பதே புதிரின் நோக்கம். ஆகையால்தான் பாடலைக் கண்டுபிடித்த பிறகு அதை முழுமையாக ஒருமுறை கேளுங்கள் என்று சொல்கிறேன்.

சரிதானே?

இன்றைய பாடல் எளிமையான பாடல்தான். வெற்றிப் படத்தின் பாடல் தான்.

முதலில் பாடகர் வரிசையாகத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று இருந்தேன். இசைத் துணுக்குகளையும் அதற்கேற்றார் போல் நறுக்கி பெயரிட்டும் வைத்தேன்.

திடீரென்று ஒரு யோசனை. அந்த வரிசையை சற்று மாற்றினால்தான் என்ன என்று! ஆகையால் நீங்கள் இன்று எதிர்பார்த்த பாடகரோ பாடகியோ இன்று வரமாட்டார்.

இந்தப் பாடலின் பாடகியை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் பாடலை மிகமிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

இந்தப் பாடல் காதற் பாடல். ஆனால் காதற் பாடல் அல்ல. என்ன குழப்பமாக இருக்கிறதா? ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் காதல் எப்படி உருவாகிறது என்பதை அணுவணுவாக விளக்கும் பாடல்.

மெல்லிசை மன்னரின் இசைப்புதிரைத் தொடங்கிய பிறகுதான்… அவர் இசையில் எத்தனை “சிச்சுவேஷன்” பாடல்கள் உள்ளன என்பதே கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. சம்பிரதாயமாக ஒரு காதற் பாடல், நாயகன் பாடல் என்பதையெல்லாம் தாண்டி சிச்சுவேஷன்களுக்கு அதிகமாக பாடல் அமைத்தது மெல்லிசை மன்னராகத்தான் இருக்கும் என்பது என் கருத்து.

சரி. இசைத் துணுக்கைக் கேளுங்கள். பாடலைக் கண்டுபிடியுங்கள்.

There have been different opinions about the complexity of the songs and the clues. I respect all your opinions.

Once again I would like to reiterate the purpose of the quiz. The purpose is to introduce the immortal songs of MSV to you all. Once you identify the song, please listen to the brilliant and delightful compositions of MSV.

I started the quiz with singers series. In fact I have already prepared the clips for eight more quizzes. With a sudden thought I changed the plan after 4th quiz and bringing in different song.

It is an easy song from successful movie. If you identify the singer, then it is just a idly walk (how long to use the phrase cake walk).

The song explains how the love blossoms between a guy and girl and the way it progresses.

Listen to the music clip and identify the song.

Lifeline clue => “Mukta Srinivasan directed movie has current chief minister as a leading protogonist.
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல் – தெரியாதோ நோக்கு தெரியாதோ (Theriyadho Nokku)
பாடியவர் – மனோரமா (Manorama)
வரிகள் – கவியரசர் கண்ணதாசன் (Kannadasan)
படம் – சூரியகாந்தி (Sooriyakanthi)
இயக்கம் – முக்தா சீனிவாசன் (Mukta Srinivasan)

அன்புடன்,
ஜிரா