A great WordPress.com site

Archive for the ‘T.M.Soundararajan’ Category

MSV Quiz 017 – நான் சிரித்தால் தீபாவளி

வணக்கம் நண்பர்களே.

காதல் டூயட் வரிசையில் இந்த முறை மாபெரும் நடிகரின் படப் பாடலைப் பார்க்கப் போகிறோம்.

ஒரு இசையமைப்பாளரை விமர்சிக்கும் போது சிலர் அவருக்குப் பின்னால் வந்த இசையமைப்பாளர்களை ஒப்பிட்டு விமர்சிப்பது நேர்மையற்ற செயல் என்பது என் கருத்து. குறிப்பாக மெல்லிசை மன்னர் இந்தச் சிக்கலில் நிறைய மாட்டிக் கொண்டவர்.

அந்தந்த கால கட்டத்தில் ஒரு இசையமைப்பாளர் எந்தெந்த சாதனைகளைச் செய்தார் என்றும் புதுமைகளைக் கொண்டு வந்தார் என்றும் தான் பார்க்க வேண்டும்.

இந்தப் பாடலும் புதுமையானது தான். ஒருவகையின் இன்று வரையில் புதுமையானதுதான். இசைத்துணுக்கைக் கேளுங்கள். பாடகர்களின் குரல் உங்கள் காதில் விழும். அவர்களின் குரல் செய்யும் ஜாலங்கள் உங்கள் மனதைக் கண்டிப்பாகத் திறக்கும்.

இசைத்துணுக்கைக் கேளுங்கள். பாடலைக் கண்டுபிடியுங்கள்.

In the duet series we have a song from legendary actor who is praised as university of acting. The song is fresh even now. The legendary singers have done magic in the musical piece you are going to listen. I am sure it is very easy to identify the song.

Lifeline clue => “The movie name was used with gender change when M.S.Viswanathan and T.K.Ramamurthy rejoined in mid 90s for a Sathyaraj movie.
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல் – சிரிப்பில் உண்டாகும் இராகத்திலே
பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
படம் – எங்கிருந்தோ வந்தாள்

Song – Siripil Undagum Ragathile
Singers – T.M.Soundararajan & P.Suseela
Lyrics – Kaviyarasar Kannadasan
Movie – Engirundho Vandhaal

அன்புடன்,
ஜிரா

MSV Quiz 014 – சொல்ல முடியாத ஓசைகள்

வணக்கம் நண்பர்களே.

நாம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடகரின் பாடலாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம். அவற்றில் சில மிகமிக அபூர்வமான பாடல்களாகவும் அமைந்தன. குறிப்பாக மெல்லிசை மன்னர் இசையில் முருகன் புகழ் கே.பி.சுந்தராம்பாள் பாடிய “பீடு தமிழ்ப் பாலுண்டு” என்ற அதியற்புதமான முருகன் பாடலை மறக்க முடியுமா?

எம்.எஸ்.வி இசையில் சித்ரா பாடிய பாடல் என்று கேட்டால் சட்டென்று விடை சொல்லாமல் யோசிப்போம். நல்ல பாடல்கள் இருந்தாலும் சற்றுக் கடினம் தான். ஆனால் இனிமேல் யோசிக்காமல் கஸ்தூரி மான்குட்டியாம் பாட்டைச் சொல்லி விடலாம் அல்லவா?!

சரி. இந்த வாரம் ஒரு மாறுதல். நாம் ஏற்கனவே பார்த்த இரண்டு குரல்களைக் கேட்கப் போகிறோம். ஆம். இன்று வருவது ஒரு டூயட் பாடல்.

மெல்லிசை மன்னர் இசையின் முதன்மைக் கூட்டணி என்று இன்று இந்தப் பாடகர்களை யோசிக்காமல் சொல்லி விடலாம். ஆனால் கவியரசருக்குப் பதிலாக இப்போது கூட்டணி சேர்ந்திருப்பது கவிஞர் வாலி. அறுபதுகளில் மத்தியில் உண்டான அரசியல் சூழ்நிலை அது. இந்தப் பாடலில் நடித்தவர்கள் இருவரும் பின்னாளில் தமிழக முதல்வராவோம் என்று அப்போது நினைத்துப் பார்த்திருப்பார்களா?

இசையைக் கேட்கும் போதே பாடலை எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள். முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது லைஃப்லைன் குறிப்பு. 🙂

It is a duet song this time. It was sung by the famous pair of MSV’s team. Instead of Kaviyarasar Kannadasan, Kavingar Vali joined hand in this song. It shows the changing political situations impacting film world. I always wonder whether the pair acted in this song ever predicted about becoming Chief Minister someday!

It is very easy to identify the song. If you have any issues…. lifeline clue is anyways there. 😉

Lifeline Clue ==> “Name of the movie is associated with Moon. May be to politically mean moon also raises (not just the sun)
To read the lifeline clue just select the letters between the double-quotes with your mouse.

While answering, please include your twitter id or blog id along with the answer.

பாடல் – எங்கிருந்தோ ஆசைகள்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா & டி.எம்.சௌந்தரராஜன்
படம் – சந்திரோதயம்
இந்தப் பாடலில் தாள இசைக்கருவிகளே பயன்படுத்தப்படவில்லை.

Song – Engirundho Aasaigal
Lyrics – Kavingar Vali
Singers – P.Suseela & T.M.Soundararajan
Movie – Chandrodayam
No rhythmic instruments are used in this song.

அன்புடன்,
ஜிரா

MSV Quiz 001 – இசைத்தாயின் அருந்தவப் புதல்வன்

அனைவருக்கும் வணக்கம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் வெளியான பாடல்களை அடிப்படையாக வைத்து வாராவாரம் நடக்கப் போகும் இந்தப் புதிரில் கலந்து கொள்வதற்கு நன்றி.

தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னர் இசைப்பயணம் நீளமானது. ஆழமானது. அவரது இசையில் பாடலும் அதைப் பாடும் குரலும் முதன்மையாக இருக்கும். அந்த இரண்டுக்கும் தேவையான அளவு இசைக்கருவிகளின் பங்களிப்பு இருக்கும்.

வேறு எந்த இசையமைப்பாளரையும் மெல்லிசை மன்னரிடம் தேடாதீர்கள். மெல்லிசை மன்னரின் இசையை அதன் வடிவத்திலேயே ரசிக்கவும் சுவைக்கவும் முயலுங்கள். ஒவ்வொரு இசையும் ஒவ்வொரு வகை என்று புரிந்து கொண்டால் அது எளிமையாகவே இருக்கும்.

சரி. வாருங்கள். புதிருக்குள் செல்வோம்.

இன்றைய பாடல் மிகப்பிரபலமான பாடல். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே பிரபலமானவை. படமும் பெருவெற்றி பெற்ற படம்.

கொடுத்துள்ள இசைத்துணுக்கைக் கேட்கும் போதே பாடலைப் பாடியவர் யாரென்று எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதை வைத்தே பாடலையும் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம் என நினைக்கிறேன். 🙂

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்தத் தருணத்தில் உலகில் எத்தனையோ விதமான நோய்களால் அவதியும் வேதனையும் படுகின்றவர்கள் அந்த நோய்கள் நீங்கப் பெற்று நிம்மதியாகவும் நலமுடனும் வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். மெல்லிசையும் அதற்கு ஒரு நல்ல மருந்தாக அமையட்டும்.

Welcome to the quiz on legendary Tamil Music Director Mellisai Mannar M.S.Viswanathan.

Today’s song is very popular and so the movie. It was a successful movie too.

It is easy to identify the singer from the music sample given. It is even more easy to identify the song from the singer’s voice. All the best. 🙂

Health is wealth. There are countless people struggling across the globe due to various diseases. I pray god for all of them for permanent cure, pleasure, satisfaction and peace. May even the music be a medicine for that.

இதோ புதிருக்கான இசைத்துணுக்கு.

Lifeline Clue ==> Director of the movie is Mukta Srinivasan

விடை – இசை கேட்டால் புவி அசைந்தாடும் (தவப்புதல்வன் திரைப்படத்திலிருந்து)

அன்புடன்,
ஜிரா