A great WordPress.com site

“சொந்தக்காரங்க இருக்காங்க. எச்சரிக்கை.” இதுதான் சுட்டாளுன்னாரு ஜாக்ரதா என்ற தெலுங்குப் படத்தின் பெயருக்கான விளக்கம்.

கிருஷ்ணா இரண்டு வேடங்களில் நடிக்க ஸ்ரீதேவியும் கவிதாவும் கதாநாயகிகளாக நடித்த படம்.

இந்தப் படம் பின்னால் ஏவிஎம் நிறுவனத்தால் தமிழில் எடுக்கப்பட்டது. கிருஷ்ணாவுக்கு பதிலாக ரஜினிகாந்த் நடித்தார். கவிதாவுக்குப் பதிலாக ராதிகா நடித்தார். ஸ்ரீதேவியின் பாத்திரத்தை ஸ்ரீதேவியே செய்தார். ஆம். போக்கிரிராஜா திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் வந்த சுட்டாளுன்னாரு ஜாக்ரதா.

தெலுங்குப் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். தமிழுக்கு வரும் போதும் அவர்தான். ஆனால் சுட்டாளுன்னாரு ஜாக்ரதா படத்தின் ஒரு பாடலைக் கூட போக்கிரிராஜாவில் பயன்படுத்தவில்லை. அத்தனையும் புதுப்பாடல்கள்.

இத்தனைக்கும் சுட்டாளுன்னாரு ஜாக்ரதா பாடல்கள் தெலுங்கில் வெற்றி பெற்ற பாடல்கள்.

தெலுங்குப் படம் என்பதாலோ என்னவோ… பாடல்களில் குத்து அதிகம். ரெக்கலு தொடிகி ரெப்பரெப்பலாடி என்ற பாடல் எனக்குப் பிடிக்கும் என்றாலும் இன்று நாம் பார்க்க இருப்பது அப்பண்ணா தன்னாமன்னா என்ற பாடல்.

கதாநாயகன் குடித்துவிட்டுப் பாடுவதாக அமைந்த பாடல். அதில் சில நகைச்சுவை வரிகளைக் கலந்து மிகவும் ரசிக்கும்படி அமைந்த பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலை பாடியுள்ளார். பாடலை நீங்களே கேட்டு ரசியுங்களேன்.

இந்த மெட்டை தமிழில் தீ என்ற திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் மீள்பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வேறொரு சூழலுக்கு. ஹார்பரில் வேலை செய்யும் நண்பர்கள் ஆடிப் பாடும் பாடல். கிட்டத்தட்ட புரட்சிப் பாடல். அந்தப் பாடலையும் கீழே தருகிறேன். இரண்டு பாடல்களையும் கேளுங்கள். வித்யாசம் புரியும்.

குறிப்பாக இரண்டாம் பாடலில் தோல் கருவிகளின் வீச்சும் பாடகரின் குரல் வீச்சும் சூழ்நிலையையே மாற்றிவிடும். அதிலும் தெலுங்குக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலும் தமிழில் மலேசியா வாசுதேவன் குரலும் கொண்டு வரும் உணர்ச்சிகள் மிகச் சிறப்பு. மிகப் பொருத்தம்.

அன்புடன்,
ஜிரா

Comments on: "MSV Non-Tamil Song Intro-003 – Chuttalunnaru Jagradha" (3)

  1. /ஒரு பாடலைக் கூட போக்கிரிராஜாவில் பயன்படுத்தவில்லை. அத்தனையும் புதுப்பாடல்கள்./ இதுக்கு ரொம்ப ‘அழுத்தம்’ குடுக்கறீங்களோ 🙂 எல்லா இடத்துலயும் சொல்றீங்க.

    அது producer constraint இல்லையா.. MD’சம்பளத்த குறைச்சு base artist மட்டும் வச்சு replay செய்ய நினைச்சா விட்டிருவாங்க.. இல்லாட்டி புதுசா செய்யப்போறாங்க.. எப்படியும் எந்த MDயும் மறுபடி உக்காந்து அதே ட்யூன பிரசவிக்க போறதில்லை.
    MSV ஒத்துக்கவே மாட்டேன்னு அடம் புடிப்பாருன்னு எதும் ஸ்பெசலா சொல்ல வர்றீங்களா?

    (if im talking out of context of the blog – dont publish – we can have it offline 😉 )

    • m.r.vijayakrishnan said:

      dear , having witnessed MSV’s many compositions,recordings,re recordings , i can tell you one thing . he does not pre tune anything , to be honest , he doesnot even remember many of his compositions, that’s the greatness of this super composer

  2. aah first time as always with MSV’s other language music. That central bit, the best portion of the song, was used in Nammavar where Kamal (SPB singing) leads the song on to Gautami to sing these lines here: http://www.youtube.com/watch?v=NaGbkSZK6og#t=7m quite a find for me that its origins are here. Thanks 🙂

Please provide your answer and comments..