A great WordPress.com site

”இதுதான் சிச்சுவேஷன். கதாநாயகன அறிமுகப் படுத்துறோம். ஊருக்கு வர்ராரு. வழியில காடு மலை மரம் மட்டை. அதையெல்லாம் பாத்து பாடுறாரு. இதுக்கு ஒரு நல்ல பாட்டு குடுங்க.”

இந்த சிச்சுவேஷனுக்கு எம்.எஸ்.வியே நிறைய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் என்ன… இயற்கையைப் பாடும் போது… இயற்கையை மட்டும் பாடாமல் கதாநாயகனாக நடித்த நடிகரின் புகழையோ கருத்தையோ சொல்வது போன்ற வரிகளும் இருக்கும்.

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக..

இது இயற்கைப் பாடலா? எனக்காக எனக்காக என்று சொல்லிக் கொள்ள விரும்பிய கதாநாயகனுக்கான பாடல். என்ன செய்வது.

இப்படி தமிழில் விதம்விதமாக பாட்டு போட்டுக் குடுத்த மெல்லிசை மன்னருக்கு மலையாளத்தில் இதே சூழ்நிலைக்கு இசையமைக்க வேண்டிய தேவை வருகிறது. ஆனால் இயற்கையைப் பாராட்டும் கருத்து மட்டும் இருந்தால் போதும் என்றதும் ஒரு தேவகானத்தையே உருவாக்கினார் மெல்லிசை மன்னர்.

அந்தப் பாடலைப் பாடிய பாடகருக்கு தேசிய விருதும் கிடைத்தது. புகழும் கிடைத்து நிறைய திரைப்படங்களில் பாடி பிரபல பாடகர்கள் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டார்.

1973ல் மலையாளத்தில் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “பனி தீராத்த வீடு”. அதன் பொருள் பிரச்சனைகள் தீராத வீடு.

பிரேம் நசீர் நாயகனாக நடித்த அந்தப் படத்தில் இடம் பெற்ற அறிமுகப் பாடலைப் பாடியவர் ஜெயச்சந்திரன். ஆம். அவருக்குதான் இந்தப் பாடலுக்கான தேசிய விருது கிடைத்தது.

பாட்டைக் கேளுங்களேன். ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருது கொடுத்தது மிகச்சரி என்று ஒப்புக் கொள்வீர்கள்.

பனி தீராத்த வீடு திரைப்படத்தில் எல்லாப் பாடல்களும் மிக இனிமையானவை.

குறிப்பாக எம்.எஸ்.வி பாடிய கண்ணுநீர் துள்ளியே என்ற பாடல் மிகமிகப் பிரபலமானது. சிறப்பான கருத்தும் உள்ளது.

சுசீலாம்மா பாடிய அணியம் மணியம் பாடலும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய மாரில் ஷயமந்தக ரத்னம் சார்த்தி என்ற பாடலும் இனிமையானவை.

இந்தப் பாடல்களையும் ஒவ்வொன்றாக இந்தத் தொடரில் பார்த்து ரசிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Comments on: "MSV Non-Tamil Song Intro-002 – Suprabhatham" (6)

  1. Lovely Raghavan. மெல்லிசை மன்னர் பெயரோட எதைச் சேர்த்தாலும் அவைகளுக்கும் அவரது இசையின் கம்பீரமும் நளினமும் சேர்ந்து விடுகிறதே! வேறெந்த இசை அமைப்பாளருக்கும். இது பொருந்தாது. நான் ராஜா ரசிகன்தான் . But MSV is MSV thaan 🙂

    • GiRa ஜிரா said:

      எம்.எஸ்.வி எப்பவும் எம்.எஸ்.விதான் 🙂

  2. Lovely. I am Or aLavukku MSV in Tamil paththi parichayam uLLa aaL dhaan. But other languages of MSV I know zero. Hence, thank you very much for introducing these beautiful other language songs for me.

    • GiRa ஜிரா said:

      That is the main idea to start this thread to share non tamil songs of MSV. I am happy you are liking them. 🙂

      • m.r.vijayakrishnan said:

        GiRa

        a great idea. one by one you are bring life into MSV Fold .thank you very much wish you get enoug time to contine your great deed .

  3. அட , நானும் மலையாள பாட்ட ரசிக்க முடியுதே

Leave a reply to GiRa ஜிரா Cancel reply